Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

வெப்பநிலை காரணமாக சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் பாரிய தீ

அதிக அளவில் வெப்பநிலை காரணமாக சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் பாரிய தீ.

நேற்று மதியம் மூன்று மணிக்கு சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் திடீர் என பாரிய தீ பரவியுள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீ பரவலின் போது 25 ஹெக்டையர் பெரும் அளவில் வனப் பகுதி நாசம் அடைந்து வருகிறது.

தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும், கடும் வெப்பமான வானிலை காரணமாக அருகில் செல்ல முடியாத நிலையில் உள்ளது எனவும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை முதல் மவுஸ்சாகலை முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்க சிறம பட்டனர்.

கடுமையான வெப்பம் நிலவுவதன் தொடர்ந்து தீ பரவி வருவதால் தீ கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது.

25 ஹெக்டையர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் அப் பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அத்துடன் நீர் ஊற்றுகள் வற்றி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மாத்தளை உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உக்குவளை மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இருவருக...

நுவரெலியா நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர...

நாவலப்பிட்டி கெட்டபுல்லா பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்த 13 பேரும் நாவலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்...