நுவரெலியா மாவட்டம் ராகலை புரூக்சைட் பகுதியில் உள்ள பழமையான தேயிலை தொழிற்சாலையொன்றில் நேற்று (01) அதிகாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலால் தொழிற்சாலை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. தொழிற்சாலையின் உபகரணங்கள் மற்றும் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராகலை பொலிஸார், தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதிலும், தீ வேகமாக பரவியதால் தொழிற்சாலையை காப்பாற்ற முடியவில்லை.
சம்பவத்தின் போது தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள் இருந்தபோதும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேத மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments