Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது திக்கோடை சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்

நான்கு பிள்ளைகளின் தாயான இவர் இன்று அதிகாலை தனது வீட்டு வளவிற்குள் சத்தம் வருவதை கேட்டு வெளியில் வந்தபோது அங்கு நுழைந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29...

மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை கண்டெய்னர் லொறியொன்று கடைகளை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.கொழும்பிலிருந்து பொருட்களை ஏ...