Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மட்டக்களப்பில் கோர விபத்து!

மட்டக்களப்பு நகருக்குள் இன்று அதிகாலை கண்டெய்னர் லொறியொன்று கடைகளை உடைத்துக்கொண்டு பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த லொறி மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் மட்டக்களப்பு நகருக்குள் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

வீதியோரத்திலிருந்த கடைகளை உடைத்துக்கொண்டு லொறி பாய்ந்ததில் கடைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு கம்பிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

விபத்தின் போது சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதிர்ஷ்டவசமாக வேறு எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இவ்விபத்து தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

துண்டிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளை மீளச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொலைத்தொடர்பு நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29...

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது திக்கோட...