Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன் கைது!

மட்டக்களப்பு சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில் தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி 4ஆம் பிரிவு பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய குமாரசாமி வசந்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சம்பவதினம் மாலை 6.00 மணியளவில் சந்தேகநபரான மகன் தனது தாயிடம் மது அருந்துவதற்காக 1,000 ரூபாபணம் கேட்டுள்ளார்.

தாயார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த மகன் தாயைப் பிடித்து ஆவேசமாகத் தள்ளியுள்ளார் இதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்த தாயின் தலை தரையில் பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து தப்பியோடிய இளைஞனை பொலிஸார் தேடிப் பிடித்துக் கைது செய்தனர் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29...

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது திக்கோட...