Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

நடுக்கடலில் தத்தளித்த இந்தியப் படகை மீட்ட காத்தான்குடி மீனவர்கள்!

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பில் கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இயந்திரம் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை இன்று காத்தான்குடி மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

நடுக்கடலில் படகு ஒன்று ஆளில்லாத நிலையில் தத்தளிப்பதாக காத்தான்குடி மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியைப் பெற்ற மீனவர்கள் அவர்களின் உதவியுடன் நடுக்கடலுக்குச் சென்று குறித்த படகை கயிறு மூலம் கட்டி இழுத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட படகில் இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டுக் கழகம் எனப் பொறிக்கப்பட்டுள்ளது சுமார் 18 அடி நீளம் கொண்ட இந்தப் படகில் இயந்திரமோ அல்லது அதனைச் செலுத்துபவர்களோ எவரும் இருக்கவில்லை இவ்வாறான ஒரு படகு இந்தப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்தது இதுவே முதல்முறை என அப்பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர்.

மீட்கப்பட்ட படகு தற்போது இராணுவம் மற்றும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29...

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் காட்டு யானைத் தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது திக்கோட...