Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை!

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி, “நீதிக்கான நீள்பயணம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்த மாநாடு, வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இதில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம், செயலாளர் திருமதி றஞ்சினிதேவி சசிக்குமார், உபசெயலாளர் பொன்னையா ஆனந்தகுமார் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டிற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமென அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

சர்வதேச நீதியையே கோருகின்றோம்

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் திருமதி றஞ்சினிதேவி சசிக்குமார், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வட்டுவாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்களது கணவன்மார்கள், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளை உறவினர்கள் நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளைத் தேடி, தாய்மார்களும் சகோதரிகளும் வெயில் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கிப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இலங்கை அரசாங்கம் வழங்கும் மரணச் சான்றிதழையோ நஷ்டஈட்டையோ நாங்கள் கோரவில்லை. எமது உறவுகளை நேரடியாகக் கையளித்துள்ளதால், உள்நாட்டுப் பொறிமுறைகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, சர்வதேச நீதியையே நாடி நிற்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.

நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 500க்கும் மேற்பட்ட தாய், தந்தையர்கள் இதுவரை நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

புத்தக வெளியீடும் புகைப்படக் கண்காட்சியும்

இவ்வாறான பின்னணியில், அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மாநாட்டில், நீதிக்கான போராட்டக் களத்தில் உயிரிழந்த தாய், தந்தையர்களின் நினைவாகப் புத்தகமொன்று வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்படவுள்ளது.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட்டபோது அவர்களிடமிருந்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிய சிறப்புப் புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாநாட்டில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, சர்வதேச நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் றஞ்சினிதேவி சசிக்குமார் கோரிக்கை விடுத்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு ...

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.நேற்று முன்தினம் காலை10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2...

...