Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

முல்லைத்தீவில் இராணுவத்தின் வசமுள்ள தபால் நிலைய காணி ஜூன் மாதம் விடுவிப்பு!

முல்லைத்தீவு தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வரும் ஜூன் மாதத்திற்குள் விடுவிக்க இராணுவம் உறுதியளித்துள்ளதாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கெளஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு தபால் நிலையம் தற்போது ஒரு தனியார் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருவதாக அமைச்சர் சபையில் கூறினார்.

தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது இராணுவத்தின் 23-வது படைப்பிரிவு நிலை கொண்டுள்ள நிலையில் அதனை 2026 ஜூன் மாதத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் வாய்மொழி மூலமான உறுதியை வழங்கியுள்ளது.

இந்தக் காணியை முறையாக தபால் திணைக்களத்திடம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணி விடுவிக்கப்பட்ட பின்னர் 2027-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய தபால் நிலையக் கட்டடத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி, “நீதிக்கான நீள்பயணம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.வலிந்து காணாமல் ஆக்கப்பட...

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு ...

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.நேற்று முன்தினம் காலை10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2...