முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் 02.12.2025 இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில குறித்த நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது
அந்தவகையில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்னதுடன், அதனைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு விசேட அத்மசாந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் .புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ.கிரிதரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்






3 Comments