தையிட்டி விகாரை தொடர்பான காணி அளவீட்டு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி அளவீட்டிற்காக நில அளவையாளர் யாழ் மாவட்டச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளனர்.
எனினும் காணி உரிமையாளர்களாக வந்திருந்த மக்களை அடையாள அட்டை பரிசோதனை மற்றும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தியதால் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.






3 Comments