Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சித்த மருத்துவ துறை நியமனங்கள் குறித்து கோரிக்கைகள்!

மாகாண ஆணையாளர் பதவி மற்றும் பிரதி ஆணையாளர் பதவி என்பன, அகில Â இலங்கை ரீதியாக விண்ணப்பம் கோரப்பட்டு ஒளிவுமறைவு இன்றி நேர்முகப்பரீட்சை நடத்ப்பட்டு தெரிவு செய்யப்பட வேண்டும் என்று அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலர், மாகாண சுகாதார அமைச்சின் செயலர், மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (25.02.2025) நடைபெற்றுள்ளது.

இதன்போது, அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருந்தால் அதைச் செயற்படுத்துவதாக பிரதம செயலர், சங்கத்தினருக்கு பதிலளித்தார்.

முன்மொழிவுகள்

அதேவேளை, சிரேஷ்ட சமூக மருத்துவ அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மருத்துவ பொறுப்பதிகாரி நியமனங்கள் தொடர்பிலும் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், வருடாந்த இடமாற்றத்தில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் சங்கப் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் சீர்செய்யப்படும் என பிரதம செயலர் பதிலளித்தார்.

அத்துடன், மருத்துவமனைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் மாகாண சித்த மருத்துவத் திணைக்களம் என்றே உள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் என உள்ளதை மாற்றவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்த நிலையில் இது தொடர்பில் ஆராயலாம் என ஆளுநர் பதிலளித்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

யாழ்ப்பாணம் குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகா...

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் தேவஸ்தானத்தில் மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்ப...

ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்புயாழ்ப்பாணம்: செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்த...