யாழ்ப்பாணம் – காரைநகர்:
இன்று 24.08.2026 காலை, காரைநகர் வேரப்பிட்டி கிராம கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கடற்கரைக்கு சென்றவர்கள் சடலத்தை அவதானித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சடலம் எவ்வாறு கடலில் அடித்துவரப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சடலம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments