Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் – கடற்தொழில் அமைச்சர் உறுதி

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் சிலர் பல நாட்களாக கரை திரும்பாத நிலையில், அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடற்தொழில் மற்றும் நீரியல் மூலவளங்கள் அமைச்சர் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, காணாமல் போன மீனவர்களின் உறவினர்களையும் சக கடற்தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்த அமைச்சர், காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்தார்.

மீனவர்களுக்கு வங்கிக் கடன்கள் நிலுவையில் இருந்தால், அவற்றைத் தீர்ப்பதற்கோ அல்லது அதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அமைச்சரவை மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதேவேளை, கடற்தொழில் படகுகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்திருந்தால் அவற்றைச் சீரமைத்து வழங்குவதற்கும் அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார்.

காணாமல் போன மீனவர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வேலைவாய்ப்பு வாய்ப்புகளும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

“இந்த அரசாங்கமும் கடற்தொழில் அமைச்சும் எப்போதும் உங்களுடன் இருக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது எமது பொறுப்பாகும்,” என அவர் ஆறுதல் தெரிவித்தார்.

மீனவர்களின் நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர், சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையில் இடம்பெற்ற இதேபோன்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

அந்தச் சம்பவத்தில் காணாமல் போன மீனவர்கள் ஆறு மாதங்களின் பின்னர் மடகாஸ்கர் அருகே உயிருடன் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய சம்பவத்திலும் உடனடியாக இறுதி முடிவுகளுக்கு வர முடியாது என்றும், குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே உறுதியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களின் நிலைமை தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என மீண்டும் உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் விஜய், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

யாழ்ப்பாணம் குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகா...

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் தேவஸ்தானத்தில் மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்ப...

ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்புயாழ்ப்பாணம்: செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்த...