யாழ் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஹெரோயின் போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்களிடம் நடத்தப்படும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






3 Comments