யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) மீண்டும் ஆரம்பமாகுகின்றன.
அகழ்வுப்பணிக்கான நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படுகிறது.
இதுவரை அந்த இடத்தில் இருந்து 240 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 239 என்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் நடைபெற்று, செப்டெம்பர் 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தன.
சுமார் 8 மாத இடைவெளிக்குப் பிறகு, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.






3 Comments