Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

சாவகச்சேரி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் சந்தி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யாழ்ப்பாணம் குருநகர் இராயசிங்கம் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

சாரதியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

யாழ்ப்பாணம் குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகா...

யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் தேவஸ்தானத்தில் மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா சிறப்பாக இடம்ப...

ஓஎம்பி தலைவர் மகேஷ் கட்டுலந்த யாழில் தெரிவிப்புயாழ்ப்பாணம்: செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்று கட்டங்களாக சுமார் 110 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 கோடியே 79 இலட்சத்த...