யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ள்னனர் உந்துருளியுடன் கனரக வாகனம் மோதி இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
விபத்தில் உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களின் உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.






3 Comments