Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மன்னாரில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி!

தொழில் தேடும் இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம் மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சி நேற்று காலை மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியில் திணைக்கள தலைவர்கள் அரச மற்றும் தனியார் தொழில் வழங்குனர்கள் தொழில் பயிற்சி திணைக்கள அதிகாரிகள் உள்ளடங்களாக வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி யை தேடுகின்ற பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வேலைவாய்ப்புக்கள் மற்றும் தொழில் பயிற்சிகளை தேடுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தெழிவூட்டல்கள் வழங்கப்பட்டது அவர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்து வழங்கினர்.

மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்ற தொழில் கண்காட்சியில் குறித்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு பயன் பெற்றதோடு தமக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை வழங்கியுள்ளன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் கு...

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர...

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணாமல...