Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மன்னாரில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 10 இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடந்த மாதம் 19 ஆம் திகதி தலைமன்னார் கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட போது இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த 10 மீனவர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்கவும் மன்னார் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் கு...

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர...

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணாமல...