Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மன்னார் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

மண்டபம் அடுத்துள்ள அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று மண்டபம் அடுத்த அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 800 கிலோ எடை கொண்டது எனவும் அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

கடல் பசு மீன்பிடி படகின் அடிபகுதியில் உள்ள இரும்பு விசிறி வெட்டியதில் உயிரிழந்ததா அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர் அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்துள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் கு...

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர...

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணாமல...