Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் சுற்றுச்சூழல் ஆய்வு!

மன்னார் கொன்னையன் குடியிருப்பு பகுதியில் இன்றைய தினம் (19.02) புதன்கிழமை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் கணிய மணல் அகழ்வுக்கான சுற்றுச்சூழல் ஆய்வினை மேற்கொள்ள வந்த 23 திணைக்களங்களைச் சேர்ந்தவர்கள்
மக்களின் பாரிய எதிர்ப்பினால், அதனைக் கைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.

கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் புதன்கிழமை(19) காலை சுமார் 9.30 மணியளவில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தனர்.

இதன் போது மாவட்டச் செயலகப் பகுதியில் மக்களால் போராட்டம் முன் னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்துடன் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றனர்.

இதன் போது அப் பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

குறித்த பகுதிக்கு கள விஜயத்தை அதிகாரிகள் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

இந்த நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று செவ்வாய் மற்றும் இன்று புதன் பாராளுமன்றத்தில் குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராகப் பேசி குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் உடனடியாக இன்றைய தினம் புதன்கிழமை(19) முன்னெடுக்கப்பட இருந்த கணிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் உடனடியாக நிறுத்தப்பட்டு,வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதன் போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், உள்ளடங்களாக கிராம மக்கள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி உள்ளூர் மீனவர்கள் கு...

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர...

மன்னார் மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது.காணாமல...