நேற்று பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும் ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.






3 Comments