யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க ரூபாய் 2 கோடியே 10 இலட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில், 240 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 239 என்புகள் மீட்கப்பட்டிருந்தன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் சீரற்ற காலநிலை காரணமாக தாமதிக்கப்பட்டிருந்ததுடன், இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தேவையான நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் திகதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில் தற்போது நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஏப்ரல் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் அகழ்வுப் பணிகள் தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






3 Comments