இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக விலை உயர்ந்த புறாக்கள் கடத்தி வரப்பட்ட சம்பவம் தொடர்பாக, நெடுந்தீவில் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை கவனித்த இலங்கை கடற்படை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தியதில் இந்தப் புறாக்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த புறாக்கள் போட்டிப் புறாக்கள் அல்லது கடத்தல் நோக்கில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.






3 Comments