வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையின் அழகு மிக்க "சவுக்க" மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரியமுறையில் பராமரிகப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், கடற்கரையோரத்தில் குவிந்திருக்கு கடற் சாதாளைகளையும் அகற்றி சுற்றுலா தளத்தை சுற்றுலாவிகளை கவரும் வகையில் அழகுபடுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடையம் குறித்து உறுபினர் ஜெ.அனுசியாவினால் சபையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
வடபகுதியில் குறிப்பாக யாழ் மாவட்டத்தின் சுற்றுலா மையங்களில் முக்கிய இடமாக இந்த சாட்டிக் கடற்கரை இருக்கின்றது.
இக்கடற்கரையின் அழகு இந்த "சவுக்கு" மரங்கள்தான். ஆனால் அவற்றுள் சில மரங்கக் பாதுகாப்பற்ற முறியும் நிலையிலும், மின்சார வடங்கள் செல்லும் மார்க்கத்துக்கு இடையூறு உள்ளாக்கும் வகையிலும் இருக்கின்றன.
இவற்றை உரிய முறையில் பராமரித்து சுற்றுலா தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது சபையின் பொறுப்பாகும்.
அதேபோன்று இந்தப் பகுதியில் காணப்படும் கடற் சாதாளைகளும் அகற்றப்படுவது அவசியமாகும். அந்த வகையில் கரைசேர்ந்து கிடக்கும் சாதாளைகளை பசகைக்காக பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் முன்மொழிவாக வலியுறுத்தினர்.
குறித்த கோரிக்கை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட நிலையில் சவுக்கு மர இலைகள் கிழைகள் வரும் மார்கழி மாதம் மவுசு மிக்கதாக இருப்பதனால் குறித்த சீரமைப்பை அடுத்த மாதம் மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அறிவித்திருந்தார்.
அதேபோன்று சாதாளைகளையும் தேவையானோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிடத்தக்கது.
தீவக பிரதான வீதிகளுக்கும் வீதி அடையாளக் குறியீடுகள் தேவை - வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!
மாணவர்களதும் மக்களதும் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகள் ஆலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை வாகன சாரதிகளுக்கு அடையாம் காண்பிக்கும் வகையில் வீதி அடையாளக் குறியீடுகளை காட்சிப் படுத்துவதுடன் வேகக் கட்டுப்பாட்டு அடையாள கம்பங்களையும் நாட்டவும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
வேலணை பிரதேச சபையின் அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது குறித்த விடையம் குறித்து உறுப்பினர் திருமதி அனுசியா ஜெயகாந்தினால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவு குறித்து அவர் உரையாற்றுகையில் -
அண்மைய காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதை காண முடிகின்றது. இந்நிலையில் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகள் முக்கிய ஆலயங்கள், பொதுச் சந்தைகள், முக்கிய வளைவுகள் மற்றும் சந்திகளில் முறையான போக்குவரத்து அடையாளக் குறியீடுகள் பொருமாலும் இல்லாத அல்லது காண்பிக்கப்படாத நிலையே இருக்கின்றது.
குறிப்பாக தீவகப் பகுதியின் முக்கிய மையமாக இருக்கும் வேலணையின் பிரதான வீதிகளில் வீதிக் குறியீடுகள் வேகக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அடையாளங்கள் இல்லாத அல்லது காண்பிக்கப்படாத நிலையே இருக்கின்றது.
அதேநேரம் தற்போது தீவகத்தை நோக்கி நாளாந்தம் தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிகளுடன் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வருகின்றன.
அத்துடன் டிப்பர் வாகனங்களும் கட்டுமாணப் பொருட்களுடன் அதிவேகமாகச் செல்கின்றன.
இதனால் விபத்துக்களும் விபத்துக்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
எனவே மாணவர்களது பாதுகாப்பையும் மக்களது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வீதிக் குறியீடுகளை முறையாக காண்பிக்க துறைசார் தரப்பினரூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியதான குறித்த கோரிக்கைக்கு சபையின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதாக தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






3 Comments