யாழ். நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளைக்கு அருகே ஏற்பட்ட முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் பலியாகியுள்ளார்.
நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59) என்பவரே குறித்த விபத்தில் பலியாகியுள்ளதோடு.
வேகமாக வந்த முச்சக்கரவண்டி வீதியினை கடக்க முற்பட்டவரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்தவரை Â வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனவும்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு.
முச்சக்கரவண்டி சாரதி நெடுந்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






3 Comments