Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி!

வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. இதனை சிவன்பகல் என்றே கூற வேண்டும். இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய வரலாற்று இடமாகவும், வழிபாட்டு இடமாகவும் இருக்கின்ற வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

வழிபாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிவனை நினைத்து விரதம்

மேலும், “இந்துக்களுடைய முக்கிய விரதமாக திகழ்வது சிவராத்திரி சிவனுக்கு இரவு பொழுதிலே சிவனை நினைத்து விரதம் இருப்பது வழமை.

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிகு ஆலயம். இந்த ஆலயத்தின் வழிபாட்டு உரிமைக்காக போராடிவரும் இந்நிலையில் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு அப்பால் போராடி வருகின்றோம்.

கடந்த வருடம் இவ்விடத்தில் சிவராத்திரி வழிபாடு இடம்பெறும் போது பொலிஸார் மிகவும் மோசமான முறையில் வழிபாடுகளை நடாத்த விடாமல், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி 13 நாட்கள் 8 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

இம்முறை துரதிர்ஷ்டவசமாக 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரியாக இதனை ஒரு சிவன்பகல் என்றே கூற வேண்டும்.

இவ்விடத்தில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்ன தான் நெருக்கடிகள் இருந்தாலும் எங்களுடைய தொன்மைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் யாரும் தீர்மானிக்க முடியாது” என்றார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

வவுனியா தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.கொழும்பிலிருந்து...

வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.நேற்றைய தினம் குறித்த நபர் தமது அத்தியாவச...

வவுனியா தெற்கு தமிழ்  பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக பி...