Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அம்பாறையில் சுகாதாரமற்ற உணவகங்களுக்கு தண்டப்பணம் அறவீடு!

நோன்பு காலத்தை முன்னிட்டு  அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (25) திடீர் உணவுப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வழக்கு தாக்கல்

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம். நௌசாத் தலைமையில் கல்முனை மாநகர் பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 உணவகங்களுக்கு எதிராக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டது.

மேலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மதன் தலைமையிலான குழுவினரினால் சம்மாந்துறை பிரதேசத்தில் தீடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 5 உணவகங்களுக்கு எதிராக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டன.

இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பண்டங்கள் மற்றும் பொருட்களை சுகாதாரத்துக்கு முறைகேடான வகையில் தயாரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவைகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பாவனைக்கு உதவாத பொருட்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

அத்துடன் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட சுகாதாரமற்ற 5 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 70,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் Â வேண்டுகோளுக்கிணங்க நீர்ப்பாசனம் மற்றும் காணி பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண திங்கட்கிழமை(1) அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே மழை பெய்து வருகின்றது.எனினும் அங்கு மின்சாரம் இன்மை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இங்கு எரிபொருள் தட்டுப்...

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே பெய்து வருகின்றது.தற்போது மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.எனினும் மக்கள் அதிகம் பாவி...