கனடாவின் சர்ரே நகரில் உள்ள நியூட்டன் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் பரபரப்பான அலுவலக கட்டிடத்தின் லாபியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காவல்துறை இதை இலக்கு வைக்கப்பட்ட கொலை (targeted shooting) என சந்தேகிக்கிறது.
சம்பவம் 76th Avenue, Surrey, British Columbia பகுதியில் உள்ள பல வணிகங்கள் இயங்கும் கட்டிடத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கி காயங்களுடன் இருந்த ஆணை கண்டுபிடித்தனர். உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டாலும் அவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொலைக்குப் பின்னணியில் கும்பல் தொடர்பு இருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையை ஒருங்கிணைந்த கொலை விசாரணை குழு (IHIT) மேற்கொண்டு வருகிறது.
மேலும், சம்பவத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் ஒரு கும்பல் உறுப்பினர் எனக் கூறப்படும் நபர் கொலைக்கு பொறுப்பேற்றதாக பதிவு வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்தக் கூற்றின் நம்பகத்தன்மையை காவல்துறை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்த சம்பவம் கனடாவில் கும்பல் வன்முறை மற்றும் சர்வதேச குற்றச் செயல்கள் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.






3 Comments