கனடா தனது இராணுவத் தேவைகளுக்காக இனி அமெரிக்காவை அதிகமாக நம்பாமல், உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய கொள்கையை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொன்ட்ரியல் நகரில் நடைபெற்ற லிபரல் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி, இராணுவச் செலவினங்களில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அவர், தற்போதைய நிலையில் கனடாவின் இராணுவக் கொள்முதல்களில் பெரிய அளவு தொகை அமெரிக்காவுக்குச் செல்கிறது என்றும், அந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ், கனடிய எஃகு, அலுமினியம், மரம் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்களைப் பயன்படுத்தி இராணுவ உற்பத்தியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு, கனடா–அமெரிக்கா இடையிலான வர்த்தக மற்றும் பாதுகாப்பு உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு நிலைப்பாடுகள் குறித்து நிலவும் கருத்து வேறுபாடுகள் இந்த முடிவுக்கு பின்னணியாக உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதன் மூலம், கனடா தனது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறை தற்சார்பை அதிகரிக்கும் புதிய பாதையில் செல்லும் நிலையில் உள்ளது.






3 Comments