Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

யானை தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று மொரவெவ பொலிஸார் கூறியுள்ளது.

கந்தளாய் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றனர் எனவும் இதன்போது யானை ஒன்று குறித்த நபர்களைத் தாக்க முற்பட்டபோது மூவரும் வெவ்வேறாகப் பிரிந்து ஓடினர் எனவும் அவ்வேளை ஒருவரை யானை தாக்கியது எனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

யானையின் தாக்குதலில் ஹெல்லென - மித்தெனிய பகுதியைச் சேர்ந்த ஜீ.எம்.ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணி...

திருகோணமலை பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.நெல் கடையொன்றை உடைத்து அங்கிருந்து நெல் மூட்டைகளை சாப்பிட்டு கடையிலிருந்த உப...

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிக...