Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

காணிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல்!...

துறைமுக அதிகார சபையின் கீழ் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம் என மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.Â

இன்று (26) நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, அவர் மேற்படி தகவலை முன்வைத்துள்ளார்.Â

குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வெளிவிவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை பிரதியமைச்சருமான அருண் கேமசந்திர தலைமையில் இடம்பெற்றது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைÂ

திருகோணமலை மாவட்டத்தில் வன இலாகாவினால் தடை செய்யப்பட்டுள்ள குளங்கள் அனைத்தும் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாஸன் கோரிக்கை வைத்த போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், மேற்படி துறைமுக அதிகார சபை 5200 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகளை மிக நீண்ட காலமாக வைத்திருக்கிறது. அதனை உடன் விடுவிக்க வேணடும் என ச.குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.Â

அத்துடன், அரசியல் விவாதங்களை நாம் செய்வதற்கு நாடாளுமன்றம் இருக்கின்றது. எனவே இந்தக் கூட்டம் அபிவிருத்தி செய்வதற்கான மக்களினுடைய நலன்சார் விடயங்கள் இங்கு பேசப்பட வேண்டும்.

இந்தநிலையில் மக்களுடைய நலன்களை கூட்டாக பேசி, நாங்கள் மக்களுக்காக பணியாற்ற முன்வந்திருக்கின்றோம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Â

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணி...

திருகோணமலை பாலத்தோப்பூர் கிராமத்திற்குள் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.நெல் கடையொன்றை உடைத்து அங்கிருந்து நெல் மூட்டைகளை சாப்பிட்டு கடையிலிருந்த உப...

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் சேருனுவர பகுதியில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிக...