Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

தாத்தா செலுத்திய வாகனம் மோதி ஒரு வயது சிறுமி பலி !

கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் தாத்தா செலுத்திய வாடகை வாகனம் மோதி ஒரு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வீட்டின் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை தாத்தா பின்னோக்கி இயக்கியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறுமி வாகனத்தை நோக்கி வந்ததாகவும், வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரேத பரிசோதனை நிறைவடைந்ததன் பின்னர் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

அண்மைக்காலத்தில் சொல்லிசையில் பாடலிசைத்த #சங்கீதனை #விடுதலை செய்ய வேண்டி கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்னால் உணர்வெழுச்சிபூர்வமாக அணிதிரண்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....

கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடியுள்ளனர் இதன்போது ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.அவரைத் தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் இன்று காலை 8.00 மணி...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா யாழ்ப்பாணம் வீதியின் பரந்தன் பகுதியில் கார் ஒன்று பாதசாரியுடன் மோதியதில் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது .இதில் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய பாதசாரி...