Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

ஆங்கிலோ - இந்தியர்களின் அடையாளப் போராட்டத்தைப் பேசும் குறும்படம்!

ஆங்கிலோ - இந்தியர்களின் அடையாளப் போராட்டத்தையும், அவர்களின் மனநிலை மற்றும் பல நுணுக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கிறது.

கலை மற்றும் சினிமா, சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருக்கும். குறிப்பாக, குறும்படங்கள் சுருக்கமான நேரத்திலேயே ஆழமான கருத்துக்களைச் சொல்லும் வல்லமை கொண்டவை. இந்த வரிசையில், `தி இந்தியன் இன் மீ (The Indian in Me)' என்ற குறும்படம், ஆங்கிலோ - இந்தியர்களின் அடையாளப் போராட்டத்தையும், அவர்களின் மனநிலை மற்றும் பல நுணுக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கிறது.

இந்தக் கதையின் மையக் கருத்து ஒரு வயதான ஆங்கிலோ - இந்தியர் ரிச்சர்ட் வால்டர்ஸ் என்பவரைச் சுற்றி நிகழ்கிறது. அவர் தனது இறப்புக்கு முன்பு, தனது வாழ்க்கையில் அவர் உணர்ந்த விஷயங்களின் உண்மைகளைப் போட்டுடைக்கிறார்.

ரிச்சர்ட் ஒரு ஆங்கிலோ-இந்தியராக இருந்தாலும் தனது பிரிட்டிஷ் வேர்களை மட்டுமே பெருமையாகப் பேசுபவராக இருக்கிறார். இந்தியா மீது வெறுப்பு கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு ஆங்கிலோ இந்தியரும் தனக்குள் இருக்கும் இந்திய அடையாளத்தை முற்றிலுமாக ஒதுக்குகின்றனர் என்று மனம் உடைகிறார். ஆனால் இறக்கும் தறுவாயில், தான் செய்த தவற்றை உணர்ந்து தனது பேரனின் மனைவி சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார்.

இதனைத் தொடர்ந்து ரிச்சார்டை பின் தொடர்வதே இந்த குறும்படத்தின் கதை. ஆங்கிலோ-இந்தியர்கள் சமூக ரீதியாக எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்கள் என்று குழப்பமடையச் செய்கிறது என்பதையும் இக்குறும்படம் காட்டுகிறது. ரிச்சர்ட் தனது வாழ்க்கை முழுவதும் ஒரு தவறான அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டார். இறுதியில், அவரது மனம் , அவர் மறந்து போன இந்திய மக்களின் மேல் இருந்த பாசத்தைத்தான் தேடுகிறது. இது தான் இப்படத்தின் ஆழமான கருத்து.

ரிச்சர்ட் மன்னிப்பு கேட்பது தான் கதையின் கிளைமாக்ஸ். ஆனால், இதனை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுக்கிறார்கள். இது குடும்பத்திற்குள் உள்ள மோதல்களையும், பழைய தலைமுறையினரின் எண்ணங்களை இளைய தலைமுறையினர் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும் துல்லியமாகக் காட்டுகிறது. இனவெறி என்பது வெளிப்படையாக மட்டும் நிகழ்வதில்லை – மனதிற்குள் மறைந்து இருக்கிறது. மன்னிப்பு என்பது ஒருவரை மாற்றும் மிகப்பெரிய ஆயுதம். உண்மையான அடையாளத்தை ஏற்றுக் கொள்ளும் வரை மனிதன் முழுமையடைய முடியாது என்பது போன்ற கருத்துகளை மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறது இந்த குறும்படம்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog