Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.

Breaking News

News Image

கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது .

அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

ஊவா மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்கள...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்க...

இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களி...