Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

விஜய்யின் அரசியல் வெற்றிக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக கஜேந்திரகுமார் வாழ்த்து!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்து மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் எனும் உயரிய பொறுப்பை ஏற்கவுள்ள விஜய்க்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள் தெரிவிப்பதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழ மக்களின் நீதிக்கான குரலாக விஜய் ஒலிக்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு புதிய வலுவைத் தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

தொப்புள்கொடி உறவுகள் என்ற உணர்வோடு ஈழத் தாயகத்தின் விடியலுக்காக உங்கள் கரங்கள் நீளும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எங்களுக்குண்டு என குறிப்பிட்டுள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...