மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய பின்னடைவுக்கு ஒரே நபரை குறை கூறுவது தவறு என மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது. சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 243 ஓட்டங்கள் எடுத்திருந்தும், அதை பாதுகாக்க முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் பிளே-ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் கருத்து தெரிவித்த இயன் பிஷப், அணித் தலைவர் ஹர்திக் பாண்டியா மட்டும் குற்றம்சாட்டப்படக் கூடாது என்றும், அணியின் மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவர் குறிப்பாக, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 8 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் குறைந்த ஓட்டங்களையே எடுத்துள்ளதும், பும்ரா மிகக் குறைந்த விக்கெட்டுகளையே வீழ்த்தியதும் அணியின் செயல்திறனை பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியான போட்டிகளால் ஏற்பட்ட சோர்வு மற்றும் ஓய்வு இல்லாமை காரணமாக வீரர்களின் செயல்திறன் குறைந்திருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.






3 Comments