சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் Rajinikanth மற்றும் Dhanush ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக காவல் தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த அநாமதேய மின்னஞ்சலில், இருவரின் வீடுகளிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையின் வீட்டிற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேனாம்பேட்டை காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நீண்ட நேர சோதனைகளுக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களும் கண்டறியப்படவில்லை. பின்னர் இது ஒரு போலி மின்னஞ்சல் மிரட்டல் என காவல்துறை உறுதி செய்தது.
அண்மைக் காலமாக முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு இவ்வாறான போலி மிரட்டல்கள் அதிகரித்து வருவதாகவும், முன்னதாக நடிகர்கள் விஜய், திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோருக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சலை அனுப்பியவர் யார் என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுமக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.






3 Comments